Kogilavani / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட்டவளை ரொசல்ல குயில்வத்தை பிரதேசத்தில் 10 இலட்சம் ரூபாய் செலவில் நூலகம் அமைக்கப்படவுள்ளது. அமைச்சர் ப.திகாம்பரம், கினிகத்தேனை பிரதேச செயலகம் ஊடாக இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இந்த நூலகத்துக்கு பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்காக மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், பிரதேச அமைப்பாளர் சங்கரலிங்கம், தொழிநுட்ப உத்தியோகஸ்தர் சுகத் ஆகியோர் குயில்வத்தை தோட்டத்துக்கு விஜயம் செய்ததுடன் தோட்ட நிர்வாகத்தின் அனுமதியையும் பெற்றுகொண்டனர்.
இந்த நூலகத்தினால் வட்டவளை, ரொசல்ல, வெலிஓயா மற்றும் குயில்வத்தை பிரதேச மக்கள் நன்மையடையலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .