2025 மே 13, செவ்வாய்க்கிழமை

’சஜித்துக்கு ஆதரவு வழங்குபவரின் வீட்டில் ரிஷாட் ஒழிந்துள்ளார்’

Gavitha   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அல்லது அவருக்கு ஆதரவு வழங்கும் நபர் ஒருவரின் வீட்டில்தான், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மறைந்திருக்ககூடும் என, இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.

கொத்மலை பிரதேச சபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு வீதியை, காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில், இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ரிஷாட் பதியுதீன் உடனடியாக கைது செய்யப்படவேண்டும் என்றும் அவர் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸவுடனேயே அவர் கலந்துரையாடியும் உள்ளார் என்றும் கூறினார்.

எனவே, ரிஷாட் இருக்கும் இடம், சஜித்துக்கு தெரியும் என்றும் கூடியவிரைவில் ரிஷாட்டை ஒப்படைக்குமாறும் அவர் கோரினார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு, ரிஷாட்டின் ஒத்துழைப்புத் தேவையில்லை எனத் தெரிவித்த அவர், ஏனெனில் தங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்றும் எனவே, 22ஆம் திகதி இரவு, 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிச்சயம் நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X