Kogilavani / 2016 ஜனவரி 21 , மு.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் உள்ள 224 பட்டதாரிகள் அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டள்ளனர்.
இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு, புதன்கிழமை(20) சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது, இரத்தினபுரி மாவட்டத்தில் 150 பட்டதாரிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் 74 பட்டதாரிகளுக்கும் நியமனம் வழங்கப்பட்டது.
நியமனம்பெற்ற பட்டதாரிகள் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் சேவையில் அமர்த்தப்படவுள்ளனர்.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், மாகாண சபை உறுப்பினர் வருண லியனகே, மாகாண பிரதான செயலாளர் எச்.பி.குலரத்ன ஆகியோர் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .