Kogilavani / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
திம்புள்ளை பத்தனை மற்றும் கொட்டக்கலை - யதன் சைட் தோட்டத்தில், 15 வயதுடைய இரண்டு சிறுமிகளை, பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் கைதான இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதிவான் நீதிமன்ற பதில் நீதவான் எ.கருணாகரன், நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
கடந்த 27ஆம் திகதியன்று, டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமியொருவர், பெண் சிசுவொன்றைப் பிரசவித்தார்.
இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம், பொலிஸாருக்கு வழங்கியத் தகவலைத் தொடர்ந்து பொலிஸார் அச்சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் ப.சோமகாந்தன் (வயது 31) என்பவரை புதன்கிழமை மாலை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். இந்நபரை, எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, யதன் சைட் தோட்டத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான அதே தோட்டத்தைச் சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க சந்தேகநபரை, எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .