Kogilavani / 2017 ஏப்ரல் 30 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டாக்காலி நாய்கள் பல இணைந்து, வீதியில் தன்னந்தனியாக சென்ற 6 வயது சிறுவனை குதறியச் சம்பவமொன்று, கம்பளை, போதல்லப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பளை, போதல்ப்பிட்டியவைச் சேர்ந்த மொஹொமட் உஸ்மான் என்ற சிறுவனே, இவ்வாறு நாய்களின் கடிக் உள்ளாகியுள்ளார். இவரது உடலில் 40 இடங்களில் காயங்கள் காணப்படுவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
போதல்லப்பிட்டிய பாத்திமா வீதயில் மேற்படி சிறுவன் தன்னந்தனியாக நடந்துச் சென்றுக்கொண்டிருந்த போது, சிறுவனை நாய்கள் கடித்துள்ளதாகவும் அவ்வழியாகச் சென்ற ஆசியை ஒருவர் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தலை மற்றும் பாதங்களில் தசைப்பகுதி பிய்ந்துவரும் அளவு, நாய்கள் இச்சிறுவனை குதறியுள்ளதாகவும் சிறுவன் அவ்விடத்திலே மயங்கிவிழுந்துவிட்டதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போதலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள இந்நாய்களானது விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயிற்றப்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் வீடுகளில் வளர்த்து வரும் ஆடுகள், கோழிகளை, இந்நாய்கள் வேட்டையாடி உண்டுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
8 minute ago
18 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
18 minute ago
21 minute ago
29 minute ago