Gavitha / 2016 செப்டெம்பர் 04 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்
கினிகத்தேனையிலுள்ள தங்கநகை பட்டரையில் 40 லட்சம் ரூபாய் பெருமதியான தங்கத்தை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடை ஐவரை கைது செய்துள்ள கினத்தேன பொலிஸார், தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இராணுவத்திலிருந்து தப்பி வந்த மூவர் உட்பட மேலும் இருவர், இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளையடிக்கைப்பட்ட தங்க நகைகளை யாழ்பாணத்தில் விற்பனை செய்த போதே, விசேட பொலிஸாரினால் குறித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேன-கண்டி வீதியில், பகதுலுவ பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை நிலையத்துடன், நகை பட்டரைக்கு கடந்த வெள்ளிக்கிழமை (01) வெள்ளை நிற மருதி காரில் வந்த மூவர், தங்க நகை கொள்வனவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பின்னர் கத்தியொன்றை எடுத்து அச்சுறுத்தி, கடையுரிமையாளரையும் கடையிலிருந்த மற்றெருவரையும் தாக்கிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, கொள்ளையடித்தவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே, பேராதனை, ராஜகிரீய நாவுல பிரதேசங்களை சேர்ந்தவர்களை பொலிஸார் கைது செய்தனர்.
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் ஒருத்தொகுதி விற்கப்பட்ட நிலையில், 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் யாழ்பாணத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த எஞ்சிய தங்க நகைகளுமே பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட ஐவரையும் திங்கட்கிழமை (05) ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர் படுத்தவுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .