Yuganthini / 2017 மே 11 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இந்திக்க அருண குமார
மாத்தளை மாவட்டத்தில், தேங்காய் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. பிரதான நகரத்தைப் போன்று, கிராமங்களிலும் தேங்காய் ஒன்று, 75 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
எவ்வாறாயினும், இந்த விலையில் விற்பனை செய்யப்படும் தேங்காய்கள், மிகச் சிறிதாகக் காணப்படுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய்க்கான பற்றாக்குறை நிலவுவதாலேயே, சிறிய அளவிலாள தேங்காய்களையும் அதிக விலைக்கு விற்பனை செய்யவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த காலங்களில் நிலவிய கடுமையான வரட்சி காரணமாக, தேங்காய் உற்பத்தி, சடுதியாக வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், தேங்காய் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, தேங்காயின் விலையானது இம்மாத இறுதிக்குள், வீழ்ச்சியடையும் என்று எதிர்ப்பார்ப்பதாக இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
9 hours ago
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
19 Apr 2026