Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 21 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமச்சந்திரன், சுஜிதா, எஸ்.கணேசன்
தலவாக்கலைக்கு வியாபாரம் செய்ய வந்த இளைஞன் கொத்தமலை நீர்தேக்கத்திலிருந்து இன்று (21) சடலமாக மீட்கப்பட்டதாக, தலவாக்கலை பொலிஸார் தெதிவித்தனர்
தீபாவளியை முன்னிட்டு புத்தளத்தில் இருந்து தலவாக்கலைக்கு வியாபாரம் செய்ய வந்த புத்தளம் கந்த குடா பகுதியை சேர்ந்த 18 வயதுடைய முகமது நிலாமுதீன் முகமது அஸ்ஜட் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 10ஆம் திகதி தலவாக்கலை சென்று, நகரசபை கடையொன்றினை வாடகை அடிப்படையில் பெற்று ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் வியாபரம் செய்துள்ளார்.
குறித்த இளைஞன் கடந்த 17ஆம் திகதி இரவு 7 மணிக்கு கடையிலிருந்து சென்றவர், காணாமற்போயுள்ளார் என தலவாக்கலை பொலிஸ் திலையத்தில் முறைப்பாடு செய்யப்பட நிலையில், இன்று கொத்மலை நீர்தேக்கத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
3 hours ago
4 hours ago