Kogilavani / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பி.கேதீஸ்
நுவரெலியா நகரில் மூன்று வியாபார நிலையங்கள், இன்று (26) முதல் 14 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளன என்றும் வியாபார நிலையங்ககைளச் சேர்ந்த 31 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
கொழும்பு புறக்கோடையிலிருந்து சனிக்கிழமை (24) நுவரெலியாவிலுள்ள வியாபார நிலையங்களுக்கு பொருள்களைக் கொண்டு வந்த லொறி ஒன்றின் உதவியாளர், கடுமையான காய்ச்சல் காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே சந்தேகத்தின் பேரில் மூன்று வியாபார நிலையங்களையும் தனிமைப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
சனிக்கிழமை கொழும்பில் இருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு நுவரெலியாவுக்குப் புறப்பட்ட குறித்த லொறியானது. நேற்று (25) இரவு நுவரெலியாவை வந்தடைந்துள்ளது.
இந்த லொறியில் கொண்டுவரப்பட்ட பொருள்களை நுவரெலியா - கண்டி வீதியில் அமைந்துள்ள ஒரு வியாபார நிலையத்துக்கும் நுவரெலியா பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் ஒன்றுக்கும் விநியோகித்துள்ளனர்.
பின்பு குறித்த லொறி உதவியாளர், அன்று இரவு கண்டி வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் தன்னுடைய இரவு உணவை உட்கொண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் நேற்று கடுமையான காய்ச்சலுக்குள்ளான நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்படி நபரை பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக, வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
13 minute ago
15 minute ago
34 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
15 minute ago
34 minute ago
35 minute ago