Kogilavani / 2016 ஜனவரி 17 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்
இலங்கையில் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட 'அரிசி' அரசியல் தற்போது இல்லாமலாக்கப்பட்டுள்ளதாகவும் நெல் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துள்ளதாகவும் அமைச்சர்; கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார்.
பேராதனை, கண்ணொறுவா விவசாய ஆராய்ச்சி நிலையத்தில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'தற்போது ஆட்சி அமைத்துள்ள எமது கட்சியானது தேசியத்துவத்துக்கு முக்கியத்துவம் வழங்குவதுடன் தேசியத்துவத்தை வெளிப்படுத்தும் விவசாயத்துறைக்கும் முன்னுரிமை வழங்கியுள்ளது. நெல் உற்பத்தியில் இலங்கை பாரிய மாறுதலை ஏற்படுத்தியுள்ளது. கடந்தகால அரசாங்கங்களின் பேசும் பொருளாக அரிசி காணப்பட்டது. ஆட்சியை வீழ்த்துவதும் புதிய ஆட்சியை உருவாக்குவதும் அரிசியாக இருந்தது.
பர்மா, இந்தியா, தாய்லந்து போன்ற நாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. அரிசிக்கென்றே சில நாடுகளுடன் இராஜதந்திரத் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், இன்று அந்நிலைமை மாறிவிட்டது.
இன்று போதிய அரிசி உள்ளூரில் உற்பத்தியாகிறது. உற்பத்தியின் பிறகு என்ன செய்வது என்பதை திட்டமிட வேண்டியவர்களாக உள்ளோம். உற்பத்தியை எவ்வாறு பாதுகாப்பது, எவ்வாறு களஞ்சியப்படுத்துவது அல்லது சிறந்த ரக உற்பத்தியை எவ்வாறு மேற்கொள்வது, சந்தை வாய்ப்பை எவ்வாறு ஏற்படுத்துவது போன்றவையே இன்றைய பிரச்சினையாக உள்ளன. அரிசி உற்பத்தியில் சிக்கல் இல்லை.
நெல் உற்பத்தியில் நாம் தன்னிறைவு அடைந்துள்ளோம். அதேபோல் சோளம் உற்பத்தியிலும் குறிப்பிட்ட இலக்கை அடைந்த போதும் சோளத்துக்கான அதிகரித்த கேள்வி காரணமாக எதிர்;பார்த்த இலக்கு போதாமல் போனது. அதாவது கோழி வளர்;ப்பில் ஏற்பட்ட திடீர்; வளர்ச்சி காரணமாக விலங்குணவு அதிகரித்துள்ளது. இதனால் தற்போது அதனை அதிகரிக்க வேண்டியுள்ளது' என அவர் கூறினார்.
'எனது தொகுதியான கலகெதரையில் விவசாயிகள் மேற்கொண்ட இஞ்சி உற்பத்தி பாரிய வெற்றியைத் தந்துள்ளது. இதனால், உள்ளூர்; தேவையை நிறைவு செய்ய முடிகிறது. இன்று விவசாயத்துறையில் எமக்குள்ள பாரிய சவால் உற்பத்திச் செலவு அதிகரிப்பாகும். எனவே, விவசாயிகள் தம்மை பாதுகாத்துக்கொள்ள விலையை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால் சர்வதேச சந்தையுடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். எனவே, உற்பத்தியை அதிகரித்தே அதனை ஈடுசெய்ய வேண்டி ஏற்படும்' என்றும் அவர் கூறினார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .