Sudharshini / 2015 டிசெம்பர் 22 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிராக முகாமைத்துவ ஊழியர்கள் மேற்கொள்ளவிருந்த பணிநிறுத்தப் போராட்டத்தை தடுக்கும் நோக்கிலேயே, தாம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
'பெருந்தோட்டங்களில் பிள்ளை பராமரிப்பு நிலையங்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ உத்தியோத்தர்கள், தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தவிருப்பதாக இரவில் எனக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே இந்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே, அன்றைய தினம் அதிகாலை இரண்டுமணியளவில் தோட்டங்களின் முகாமையாளர்கள் என்னுடன் தொடர்புக் கொண்டு தமது ஊழியர்கள் வழமையாக தொழிலுக்குச் செல்வார்கள் என உறுதியளித்தனர். அதன்பின்னரே தமது சத்தியாக்கிரகத்தை இடைநிறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
எனினும், இந்த விடயத்தின் உண்மை நிலைமையை அறியாமல் மலையகத்தில் ஓர் அமைச்சர் செயற்படுகின்றார் என்பது வேதனைக்குரிய விடயமாகும். அவர், ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிப்பதற்காக உண்மை தன்மையை அறியாமல் மக்களுக்கு பிழையான தகவல்களை கொண்டுச் செல்ல முயல்கின்றார் என' அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .