2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பற்ற முகக்கவசங்கள்

Gavitha   / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத் எச்.எம்.ஹேவா

ஹட்டன் நகரிலுள்ள ஒருசில வியாபார நிலையங்களில், எவ்விதப் பாதுகாப்பு நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் முகக்கவசம் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

வியாபார நிலையங்களில், பொலித்தின்களால் மூடப்படாது,  முகக்கவசங்கள் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டுக் கிடப்பதாகவும் இவ்வாறு தொங்கவிடப்பட்டுள்ள முக்ககவசங்களில் இளையான்கள் மொய்ப்பதால் அதை விலைக்கு வாங்கிச் செல்லும் நுகர்வோர் வேறு சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே முகக்கவசங்களை சுகாதார முறைமைக்கு அமைவாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X