2025 ஜூலை 02, புதன்கிழமை

பாலம் திறந்துவைப்பு

Kogilavani   / 2017 நவம்பர் 16 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

 

நாடளாவிய ரீதியில், ஆயிரம்  பாலங்கள்  அமைக்கும்  வேலைத்திட்டத்தின் கீழ், அக்கரப்பத்தனை, மன்ராசி தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாலம், மக்களின் பாவனைக்காக, நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது.

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் ஆலோசனைக்கு அமைவாக,  மத்திய  மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இந்தப் பாலம் புனரமைக்கப்பட்டது.

பாலம் கையளிக்கும் நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் பி.சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .