Editorial / 2018 ஏப்ரல் 10 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா மாட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுத்தருமாறு, இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆறுமுகன் எம்.பி, நுவரெலியா மாவட்டத்தில் பல உள்ளூரராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இணைந்து, அமைச்சர் பைஸர் முஸ்தபாவை நேற்று (09) சந்தித்தனர். இதன்போதே, ஆறுமுகன் தொண்டமான் எம்.பி, மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் நோர்வூட் பிரதேச சபை, மஸ்கெலிய பிரதேச சபை, கொட்டகலை பிரதேச சபை, அக்கரப்பத்தனை பிரதேச சபை ஆகியவற்றுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் பெற்றுத் தருமாறு, அவர் இதன்போது அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
15 minute ago
23 minute ago
26 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
23 minute ago
26 minute ago
28 minute ago