2025 மே 12, திங்கட்கிழமை

பொகவந்தலாவையில் 37 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

Gavitha   / 2020 நவம்பர் 02 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

பொகவந்தலாவை பிரதேசத்தில், மேலும் 37 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று (2) மேற்கொள்ளப்பட்டதாக, பொகவந்தலாவ பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேற்படி பிரதேசத்தில், கொரோனா தொற்றாளர்கள் மூவர் இனங்காணப்பட்டதையடுத்து முதற்கட்டமாக 32 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 37 பேருக்கு, இன்று (2) பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பரிசோதனை மாதிரிகள் கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X