Gavitha / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
12 வயது சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய தந்தையை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமர்று பிபிலை நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று வெள்ளிக்கிழமை (09) உத்தரவிட்டார்.
மேலும் அதே சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில், சிறுமியின் பாட்டனும் பிபிலை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிபிலை, வரகாலந்த கிராமத்திலுள்ள 50 வயதுடைய தந்தையே, இவ்வாறு மதுபோதையில் தனது மகளை வன்புணர்வுக்குட்படுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி விசாரணைக்குட்படுத்தப்பட்ட போது, அவர் ஏற்கெனவே தனது பாட்டனால் (வயது 67) வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறிப்பிட்ட 12 வயது சிறுமி பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுள்ளமை வைத்திய பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
10 minute ago
31 minute ago
1 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
31 minute ago
1 hours ago
7 hours ago