Kogilavani / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன், ஷெல்ட்டன்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து, மேன்முறையீடு செய்வதற்கு ஆலோசித்து வருவதாக, கந்தப்பளை கொங்கோடியா தோட்டக் கொலை வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேருக்கு, நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி இ.எம்.லலித் ஏக்கநாயக்க, கடந்த 05.08.2016 அன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தெரியவருவதாவது,கந்தப்பளை கொங்கோடியா தோட்டத்தில் 2004.02.01 ஆம் திகதியன்று இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் நிலையை தொடர்ந்து மூன்று பிள்ளைகளின் தந்தையான பெரியசாமி அரிராமன் என்பவர் கத்தியால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்டார்.
இக்கொலை தொடர்பில், இராகலை பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அந்தத் தோட்டத்தில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பழனியாண்டி முத்துராஜா, பழனியாண்டி ஹரிராம், பழனியாண்டி நீலமேகம், பழனியாண்;டி சுப்பிரமணியம், நீலமேகன் கமலநாதன், நீலமேகன் பாலச்சந்திரன், சுப்பிரமணியம் விக்னேஸ்வரன் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, அவ்வழக்கின் விசாரணைகள், கடந்த 12 வருடங்களாக நடைபெற்று வந்தன.
விசாரணைகளின் முடிவில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தவர்கள் குற்றவாளிகளாக இனங்கண்ட மேல் நீதிமன்றம், அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
35 minute ago
37 minute ago
56 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
37 minute ago
56 minute ago
57 minute ago