டி.சந்ரு / 2020 செப்டெம்பர் 20 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணசபை முறைமையினை அகற்றுவது என்பது சிறந்தவிடயமல்ல எனத் தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் காங்ரஸின் உபதலைவரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பி.சக்திவேல், இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர், 19ஆவது திருத்ததத்தை நீக்கிவிட்டி, 20ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதில் சிலருக்கு பல சந்தேகங்கள் எழுந்துள்ளன என்றும் கூறினார்.
மாகாண சபை உருவாக்கத்தின் ஊடாக, மக்களுக்கு பல சேவைகள் கிடைக்கப்பெற்றன என்றும் பாடசாலை அபிவிருத்தி, தொழிற்றுறை, சுகாதாரம், உள்ளூராட்சி சபைகள் கண்காணித்தல் போன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவர் கூறினார்.
எனினும், மாகாணசபைகளுக்குக் கிடைக்கப்பெற்ற நிதிகள், மிக குறைவாகவே கிடைத்தது என்றும் அதில், 13ஆவது சட்டம் முலுமையாக முடக்கபட்டிருந்தது என்றும் கூறினார்.
மாகாணசபையால், தோட்டங்கள், நகரபகுதிகளுக்கு சேவையை முன்னெடுக்க, இழகுவாக இருந்தது என்றும் கடந்த காலங்களிலே, ஒவ்வொரு மாகாணங்களுக்கும் மாகாண அமைச்சர், முதலமைச்சர் என அங்கிகாரம் வழங்கபட்டு இருந்தது என்றும் அவர் கூறினார்.
இதை, எதிர்வரும் காலங்களில் நல்லமுறையில் பரீசிலித்து, மாகாணம், மாவட்ட ரீதியாக வாழும் மக்களுக்கு, அவர்களுக்கான சேவையை, இலகுவாக பூர்த்தி செய்து கொள்வதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
19 Apr 2026
19 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Apr 2026
19 Apr 2026