Editorial / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.கணேசன்)
மஸ்கெலியா - சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தைப் பிரிவில் நேற்று (14) மாலை ஏற்பட்ட மினி சூறாவளியால் 5 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்குரிய நிவாரணங்கள் பிரதேச பொதுமக்களாலும் தோட்ட நிர்வாகத்தாலும் வழங்கப்படுகின்றன. இந்தப் பகுதியில், பாதுகாப்பற்ற முறையில் உள்ள மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago