Freelancer / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரா.யோகேசன்
வட்டவளை மௌன்ஜின் தோட்டத்தில் மாணிக்க கல் அகழ்வு மேற்கொள்ளும் பகுதிக்கு அருகில் உள்ள பற்றை காட்டுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டதையடுத்து சில பகுதிகள் எரிந்து நாசமடைந்துள்ளது.
குறித்த பகுதியில் அண்மை காலமாக தீ வைக்கும் சம்பவம் அதிகரித்துள்ள நிலையில் அப்பகுதியில் தற்போது தேசிய மாணிக்க கல் திணைக்களத்தினூடாக அகழ்வு மேற்கொள்ளப்படுகின்றது.
குறித்த தீ பரவல் அப்பகுதியில் காணப்படும் மின் கம்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அப் பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் தீயினால் உயிரினங்கள் பாதிப்படைவதோடு தற்போது மலையகத்தில் வரட்சியான காலநிலை நிலவுவதால் இவ்வாரன தீ வைப்பு சம்பவங்கள் காலநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
4 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
45 minute ago