George / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-மு.இராமசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ, ரமேஸ்,எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ், இலங்கா காமினி
தலவாக்கலை நுவரெலியா வீதியில், லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெயார்வெல் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் 50 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, சம்பவ இடத்திலேயே பலியானதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்,
டீ மலை தோட்டத்தை சேர்ந்த 29 வதுடைய பெருமாள் நாகேந்திரன் என்பரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.,
கொழும்பிலிருந்து லிந்துலை டீ மலைக்கு தனது மனைவி மற்றும் குழந்தையை ஏற்றிக்கொண்டு வந்த முச்சக்கரவண்டி சாரதி, நித்திரை காரணமாக முச்சக்கரவண்டியை கட்டுபடுத்த தவறியுள்ளார்.
அதனையடுத்து, பாதையை விட்டு விலகிய முச்சக்கரவண்டி பள்ளத்தில் விழுந்துள்ளது. மனைவி மற்றும் 1 ½ வயது குழந்தையும் காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .