சுஜிதா / 2017 டிசெம்பர் 09 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரத்துக்கு, பிரத்தியேக வகுப்புக்கு வந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்த முயற்சித்த இளைஞனை பிடித்த பிரதேச மக்கள், அவரை, தலவாக்கலை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சிறுமியின் கூக்குரல் சத்தத்தை கேட்ட பின்னரே, சிறுமி வன்புணர்வு முயற்சியிலிருந்து, பிரதேச மக்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இன்று (09) பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம், தலவாக்கலை நகரசைப்பு பின்னாலுள்ள வீதியோரத்தில் இடம்பெற்றள்ளது என்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .