Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 04 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன், ஆ.ரமேஸ்,எஸ்.கணேசன்
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இன்று(4) மதியம், கெப்ரக வாகனமும் ,லொறியும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில், இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இந்தச் சம்பவத்தில் கெப்ரக வாகனத்தின் சாரதி உட்பட அதில் பயணித்த மற்றொரு நபருமே காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தலவாக்கலை பகுதியிலிருந்து வந்த கெப் வண்டியும், ஹட்டனிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கிச் சென்ற லொறியும், அட்டன் குடாகமை பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
அத்துடன், இப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்யும் கடும் மழையினால்,பிரதான வீதியில் வழுக்கல் ஏற்பட்டுள்ளது .இந்த நிலையில் குறித்த இரு வாகனங்களும் தனது வேக கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
26 minute ago
44 minute ago
46 minute ago