2025 மே 06, செவ்வாய்க்கிழமை

வெலிமடை நீதிமன்றத் தொகுதிக்குப் பூட்டு

Gavitha   / 2020 நவம்பர் 11 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நீதிமன்றத்துக்கு வரக்கூடும் எனும் அச்சத்தால், வெலிமடை நீதிமன்றத் தொகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெலிமடை நீதவான் நீதிமன்றம், வெலிமடை மாவட்ட நீதிமன்றம் ஆகியனவே மூடப்பட்டுள்ளன.

வெலிமடை நீதவான் நீதிமன்ற நீதிபதி நதீரா போகாதெனிய விடுத்த உத்தரவுக்கமையவே, இந்த நீதிமன்றங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்து என்று, சட்டத்தரணிகள் சங்க சார்பில் சேனக்க பண்டார தெரிவித்தார்.

நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ள காலப் பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள வழக்குகளுக்கான மாற்றுத் திகதிகள், நீதிமன்றம் மீள் திறக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X