2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

வாழைக்குலைகளுக்குள் கருங்காலிகளை மறைத்து கொண்டு சென்றவர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ

பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கருங்காலிப் பலகைகளை, வாழைக்குலைகள் மற்றும் விளாம்பழங்களுக்குள் மறைத்துக் கொண்டு லொறியில் ஏற்றிச் சென்ற சாரதியை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (16) காவத்தைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அனுமதிப்பத்திரமின்றி மொனராகலையிலிருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்த குறித்த லொறியை காவத்தைப் பிரதேசத்தில் வைத்து சோதனை செய்த போதே இவை கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவத்தைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரொஹான் ஒழுகல தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .