2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஹட்டன் டிப்​போவின் வருமானம் 8.5 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

Editorial   / 2019 பெப்ரவரி 19 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

விடுமுறையுடன் கூடிய வார இறுதி என்பதால், ஹட்டன் பஸ் டிப்போவுக்கு 8.5 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான ஹட்டன் டிப்போவின் பரிசோதகர் ரோஹன சில்வா தெரிவித்தார்.

கடந்த 16ஆம் திகதியிலிருந்து இன்று (19) அதிகாலை வரை நாளொன்றுக்கு 85 பஸ்கள் சேவையில் ஈடுபட்டதாகவும், இதில் அதிகமானவை ஹட்டன் ரயில்வே நிலையத்திலிருந்து நல்லதண்ணி வரை சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்காக சேவையில் ஈடுபட்டதென அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் 8.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதெனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .