2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

15 இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் 18பேர் பலி: 30 பேர் காயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 06 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக், இந்திக அருண  

மலையகம் உள்ளிட்ட 15 இடங்களில், கடந்த நான்கு தினங்களில் இடம்பெற்ற வௌ;வேறு விபத்துக்களில், 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி - யாழ்ப்பாணம் ஏ 9 வீதி, நாவுல, உடுதெனிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு (4) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர். நாலந்தாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் மற்றும் 23 வயதுடைய இளைஞன் ஆகியோரே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக நாவுல பொலிஸார் கூறினர்.

இவ் வீதியில் பயணித்த டிப்பர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில்; பயணித்த இருவருவரும் உயிரிழந்தனர். இவ்விபத்துடன் தொடர்புடைய டிப்பர் ரக வாகனத்தின் சாரதியை கைதுசெய்துள்ளதாகவும்  பொலிஸார் கூறினர்.

இதேவேளை, கடந்த நான்கு தினங்களில் மலையகம் உள்ளிட்ட 18 இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

குறிப்பாக மலையகத்தில் தம்புள்ளை, இறம்புக்கனை, பசறை, கண்டி, கித்துல்ஹிட்டியாவ, நாவுல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற ஆறு விபத்துக்களில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒரு வயது குழந்தை, 11 வயது சிறுமி மற்றும் 15 சிறுவன் ஆகியோரும் உள்ளடங்குவதாக பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .