Kogilavani / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ரமேஸ்
“டெங்கு மற்றும் எச்1.என்1 இன்புளுவன்சா (பன்றிக் காய்ச்சல்) ஆகிய நோய்கள், மலையகத்தில் குறிப்பாக மாத்தளை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் அதிகமாக பரவி வருவதால், பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்” என, ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் முன்னாள் தலைவரும் மிருக வைத்தியருமான அ.நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
'இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் தொடர்பில் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளுக்குக் காய்ச்சல், தலைவலி, இருமல், தொண்டைக் கரப்பான், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்படின் உடனடியாக, வைத்தியரின் ஆலோசனையை பெறுவதே சிறந்தது. வீட்டில் வைத்து சுகப்படுத்த முடியுமென்ற மூடநம்பிக்கையை விட்டுவிட்டு, பெற்றோர் தமது பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறைக்கொள்ள வேண்டும்.
காய்ச்சல் முழுமையாக குணமடைந்தப் பின்பு, பாடசாலைக்கு மாணவர்களை அனுப்புங்கள்.
இதற்கூடாக நோய்நிலைக்கு உள்ளான பிள்ளையை விரைவில் குணப்படுத்த முடியுமென்பதுடன் பாடசாலையில் ஏனைய மாணவர்களுக்கு நோய்கள் பரவாமல் இருப்பதை தடுக்க முடியும். இதேவேளை, கர்ப்பிணிகளும் மிகுந்த அவதானத்துடன் இருப்பது அவசியம். பொதுமக்கள் தமது சுற்றுப்புறச் சூழலை துப்புறவாக வைத்துக்கொள்வதால் டெங்கு நோய்,பன்றிக் காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதிலிருந்து ஓரளவேனும் விடுபட முடியும் என்று அவர் மேலும் கூறினா்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago