Kogilavani / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மலையகப் பெருந்தோட்டங்களில் லயன் வீடுகளில் வசித்து வரும் அனைவருக்கும், தனி வீட்டுத் திட்டத்தைப் பெற்றுக்கொடுப்பதே எமது இலக்கு. அதனால்தான், இறம்பொடை, வெவெண்டன் தோட்டத்திலும், அரசியல் மற்றும் கட்சி பேதமின்றி, தனி வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்படுகின்றது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் அபிவிருத்தி பயணத்தில் பாகுபாட்டுக்கு இடமேயில்லை' என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்தார்.
கொத்மலைப் பிரதேச சபைக்கு உட்பட்ட வெவெண்டன் தோட்டத்தில், கற்பாறைச் சரிவை எதிர்கொண்டுள்ள 58 குடும்பங்களுக்கு, தனி வீடுகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,
'வார இறுதிதோறும் மக்கள் சந்திப்புகளை நடத்தி, அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துவரும் எம்மைப் பார்த்து, 'வாராந்த அரசியல்வாதிகள்' என சிலர் வர்ணிக்கின்றனர். இவ்வாறு வர்ணிப்பவர்களால், தாம் ஆண்டாண்டு காலமாக ஆண்டு வந்து வெவெண்டன் தோட்ட மக்களுக்குக்கூட, வீடுகளைக்கூட பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
வாராந்த அரசியல் பற்றி பேசுவோர், தங்களது வருடக்கணக்கான அரசியல் வாழ்க்கை, தேய்வுப் போக்கில் செல்வது தெரியாமல் உள்ளனர். இவர்கள் குடிகொண்டிருந்த வெவெண்டன் தோட்டத்தின் பரப்பளவின் உரிமையும் இன்று குறைந்துவிட்டது என்பதை இங்கு வாழும் மக்கள் அறிவர்' என்றார்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago