Kogilavani / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, தனது நண்பருடன் வரக்காபொலைக்குச் சென்ற 22 வயது மகனான பிரதீப் ஆரியபால என்பவரை, காணவில்லை என கண்டி- திகனையைச் சேர்ந்த அவருடைய தாய் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்த போதிலும் பொலிஸார் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெளி மாகாணத்திலிருந்து வந்த அமில சந்துகெலும் என்ற 25 வயது இளைஞனுடன் நெருங்கிப் பழகிய, மகன் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து தங்கவைத்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி, வரக்காபொலைக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்றனர்.
அன்றிலிருந்து இதுவரை இருவர் தொடர்பிலும் தகவல் இல்லை. ஒரு மாதத்துக்கு பின்பு எனது மகனின் தோற்றத்தையுடைய இளைஞனின் சடலத்தை பொலிஸார் என்னிடம் காட்டினர்.
அன்றைய தினமே, அமில சந்துகெலுமிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
இதனை நான் பொலிஸாரின் கவனத்துக்கும் கொண்டு வந்தேன். எனினும், இந்த விவகாரத்தில் பொலிஸார் அசமந்தப் போக்குடனே செயற்பட்டு வருகின்றனர்' என அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .