Sudharshini / 2015 செப்டெம்பர் 15 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.நிரோஷினி
'மலையகத்தில் எதிர்வரும் 5 வருட காலத்தினுள் லயத்து வாழ்க்கையை இல்லாதொழித்து புதிய கிராமங்களை உருவாக்கி வீடுகளை அமைத்துக் கொடுத்து, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வந்த அடிப்படைப் பிரச்சினைகள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொடுப்பேன்' என மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
இது தொடர்பில் நேற்றுத் திங்கட்கிழமை (14) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'நல்லாட்சியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் மலையக மக்களுக்கென தனியான அமைச்சை ஒதுக்கிக் கொடுத்து 'தோட்டம்' என்ற சொல்லை மாற்றி மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு அமைச்சாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.
'மலைநாட்டு மக்களுக்கு புதிய கிராமத்தை அமைத்துக் கொடுக்கும் நோக்கோடு ஜனாதிபதியும் பிரதமரும் இந்த அமைச்சுப் பதவியை எனக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார்கள்' என குறிப்பிட்டார்.
'இந்த அமைச்சுப் பதவியினூடாக மலையகத்தில் 5 வருட காலத்தினுள் புதிய கிராமங்களை அமைத்துக் கொடுக்கவுள்ளோம்.
மேலும், கடந்த காலத்தில் அமைச்சர்கள் சிலர் சரியான முறையில் திட்டமிட்டு வேலை செய்யாத காரணத்தினாலேயே தேர்தலில் பின்னடைவைச் சந்திக்க நேரிட்டது. அவர்கள் செய்த தவறை நாங்கள் செய்யாமல் புதிய பாதையில் பயணிக்கவுள்ளோம்.
மலையகத்தில் எனக்கும் மனோ கணேசனுக்கும் இராதாகிருஷ்ணனுக்கும் கிடைத்துள்ள அமைச்சு பதவிகளூடாக மலையகத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தவுள்ளோம்' என அவர் தெரிவித்தார்.
21 minute ago
31 minute ago
32 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
31 minute ago
32 minute ago
44 minute ago