2026 ஏப்ரல் 18, சனிக்கிழமை

'மாநாட்டில் பங்கேற்கோம்'

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

'ஸ்ரீ லங்கா சுந்திரக் கட்சியின் தலைவர், எம்மை செல்லாக்காசாக்கி விட்டார். இது மிகவும் கவலைக்குறிய விடயமாகும். பல விடயங்களில் எம்மை ஒதுக்கும் தலைமைத்துவம் கட்சியின் மாநாட்டுக்கு மட்டும் அழைக்கின்றது.

இதற்கு மட்டும் எமது ஆதரவு தேவைப்படுகின்றதா?' என  கண்டி மாநகர சபையின் முன்னாள் மேயர் சேன திசாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட நாடளுமன்ற உறுப்;பினர் திலும் அமுனுகமவின் காரியாலயத்தில், நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இம்மாநாட்டில் கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்கள் சிலரும் கலந்துகொண்டனர்.  அங்கு மேலும் கூறிய அவர், 'தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் உள்ளூராட்சிமன்ற தேர்தலை பிற்போட்டுள்ளதால், மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.

'குருநாகலையில் நடைபெறவுள்ள கட்சியின் மாநாட்டுக்கு அழைத்திருக்கும் கட்சியின் தலைமைத்துவம், எம்மை செல்லாக் காசாக்கியுள்ளது. இதனால், கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்ளப் போவதில்லை என நாங்கள் தீர்மானித்துள்ளோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .