Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Ilango Bharathy / 2021 டிசெம்பர் 28 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார்.
அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர், அந்த சிறையிலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவரை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, சிறைச்சாலைக்குச் சென்று அண்மையில் பார்வையிட்டுள்ளார்.
“தான், ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்குச் சென்றிருந்தேன். சுமார் அரைமணிநேரம் அவருடன் உரையாடியிருந்தேன். நான் தனியாக செல்லவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் சென்றிருந்தேன். காதலி ஒரு வைத்தியர், அவர், தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். என்னுடன், என்னுடைய ஊடகச் செயலாளரும் வருகைதந்திருந்தார்” என்றும் எஸ்.பி. திஸாநாயக்க தனியார் ஊடகமொன்றுக்கு கருத்துரைத்திருந்தார்.
“ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்பது தொடர்பில் கலந்துரையாடவில்லை. எனினும், பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதியிடம் வலியுறுத்தமுடியும். எனினும், இதுதொடர்பில் நான், சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன்” என்றும் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
7 hours ago