Freelancer / 2022 பெப்ரவரி 17 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வினோத்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவர், பெருமளவு ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கொழும்பில் இருந்து யாழிற்கு பேருந்து மூலம் ஹெரோய்ன் போதைப்பொருளை கடத்திவந்து, யாழில் உள்ளூர் தரகர்கள் மூலம் பல நாட்களாக விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
குறித்த பெண் தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிற்கு விடயங்கள் கசியத்தொடங்கியதை அடுத்து குறித்த பெண்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் குறித்த பெண் நேற்றைய தினம் அரியாலை பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்படும் வேளை பெண்ணிடம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிராம் தூய ஹெரோய்ன் போதைப்பொருள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
இதன் உள்ளூர் பெறுமதி 5 தொடக்கம் 6 இலட்சம் ரூபாயென மதிப்பிடப்பட்டுள்ளது எனவும் கைது செய்யப்பட்ட பெண் 33 வயதுடைய அரியாலை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண்ணிடம் ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபடும் தரகர்கள் தொடர்பிலும் கொழும்பு முகவர்கள் தொர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
51 minute ago
58 minute ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
58 minute ago
3 hours ago
05 Nov 2025