Editorial / 2023 ஓகஸ்ட் 02 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரக்காபொல – துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். சுமார் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், எதிர்திசையில் பயணித்த பாரவூர்தியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் சுமார் 10 பேர் காயமடைந்து வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
38 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
7 hours ago
16 Apr 2026
16 Apr 2026