2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெலின் 20 வருடகால வெற்றிப்பயணம்

A.P.Mathan   / 2013 ஜனவரி 07 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


நாட்டின் தேசிய கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குநரான ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல், இன்று 20 வருடங்களின் நிறைவைக் கொண்டாடுகிறது. 1993ஆம் ஆண்டு தனது பயணத்தை ஆரம்பித்த மொபிடெல், இலங்கையில் முன்னணி கையடக்கத் தொலைபேசி வழங்குநர்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. 'Advanced Mobile Phone System’ (AMPS) எனப்படும் அபிவிருத்தியடைந்த அடிப்படை செலூலர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அது தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது. இந்த சாதாரண ஆரம்பத்திலிருந்து இலங்கையை தெற்காசியாவின் அடுத்த அதிசயமாக மாற்றவென, மொபிடெல் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத் (ICT) துறையில் முன்னணி நிறுவனமாக துரித வளர்ச்சி கண்டுள்ளது.

2002ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மொபிடெல் நிறுவனமானது ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திற்கு முற்றிலும் சொந்தமான ஒரு துணை நிறுவனமாக மாறியது. அடுத்த வருடங்களில் மொபிடெல் படிப்படியாகப் பலமடையத் தொடங்கியது. EDGE/GPRS எனும் 2.5G GSM ஐ அது ஆரம்பித்தது. 2004ஆம் ஆண்டு இரட்டை அலையில் (Dual band) செயற்படக்கூடிய EDGE/GPRS வசதியுடனான 2.5G GSM வலைப்பின்னலை ஆரம்பித்தது. 2007ஆம் ஆண்டு 3.5G HSPA வலையமைப்பை ஆரம்பித்ததன் மூலம் உலகில் முதன் முதலில் இவ்வசதியை வழங்கிய 10 கையடக்கத் தொலைபேசிச் சேவையை முதன் முதலில் வழங்குநர்களில் ஒருவராக இது விளங்கியது. இதன்மூலம் கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்துறையில் அது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. தெற்காசியாவில் Super 3.5G வலையமைப்பைக் கொண்ட முதலாவது நிறுவனமாகவும் மொபிடெல் விளங்குகின்றது. அத்துடன் HSPA+ MIMO தொழில்நுட்பத்தையும் முதன் முதலில் மொபிடெல் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இதன் டவுன்லின்க் (Downlink) வேகம் 28.8 Mbps ஆகும். 96 Mbps இற்கும் கூடுதலான டவுன்லின்க் வேகம் கொண்ட 4G/LTE தொழில்நுட்பத்தையும் தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முதலாக வெற்றிகரமாக பரீட்சித்தது.

பெறுமதிமிக்க புதிய அம்சங்கள், வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட சேவை, தொழில்நுட்பத்தின் மூலம் மிகச் சிறந்த பயனை அடைதல், விநியோக முறை, உற்பத்தித்துறை, சேவைகள், பெறுமதிசேர் சேவைகள், வாடிக்கையாளர்களின் தேவைகள், ஆர்வங்கள் குறித்து கவனம் செலுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தனது மூலோபாயத்தை மொபிடெல் நிறுவனம் தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றது. ஆகக்கூடிய சேவைத் தரம், பாவனையாளர் மீது அக்கறை, வசதிகளை வழங்குதல், தொடர்பாடல் ஆகியவற்றின் ஊடான வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட மூலோபாயம் குறித்து கவனம் செலுத்தும் அதேவேளையில், அலைவரிசை (Channel) முகாமைத்துவத்தை தீவிரப்படுத்தும் முகமாக விநியோக முறைகளை விஸ்தரித்து, பிரிவுக்கான உட்கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தவும் மொபிடெல் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.

மொபிடெல் நிறுவனம் அதன் வலையமைப்பை தரமுயர்த்துவதில் ஈடுபட்டுள்ளது. தற்போதைய விஸ்தரிப்பின் மூலம் நாடளாவிய ரீதியில் 1,800 தள நிலையங்கள் உருவாக்கப்படும். சனத்தொகையில் 100% யும் உள்ளடக்கும் வகையில் சேவையாற்றுவதே இதன் நோக்கமாகும். மொபிடெலின் தற்போதைய அபிவிருத்தி மற்றும் மாற்றங்கள் காரணமாக, கையடக்கத் தொலைபேசி தொழில்நுட்பத்தில் அது முன்னணி பங்கை வகிப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. இது இலங்கையின் அடுத்தகட்ட ICT தொழில்நுட்ப அபிவிருத்தியை வடிவமைப்பதற்கு நிச்சயம் உதவியாக இருக்கும். மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர், இலங்கையை ஆசியாவின் அறிவுத்துறை கேந்திரமாக விளங்கச் செய்வதற்கான அரசாங்கத்தின் அபிவிருத்தி மூலோபாயத்தில் முன்னுரிமை பெற்றுள்ள வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் முக்கிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநராக மொபிடெல் தற்பொழுது விளங்குகின்றது.

மொபிடெலின் 20ஆவது ஆண்டு நிறைவு குறித்து ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெலின் தலைவரான நிமால் வெல்கம கருத்து வெளியிடுகையில், 'நாம் எப்பொழுதும் அக்கறை கொண்டுள்ளோம்' என்பதே மொபிடெலின் சித்தாந்தமாகும்' என்று கூறினார். இதன் காரணமாக, இந்நிறுவனம் கடந்த 20 வருடங்களாக வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட சேவையை தொடர்ந்து வழங்கி வருகின்றது. எமது வாடிக்கையாளர் வலையமைப்பில் வர்த்தகர்கள் உட்பட நாட்டின் தூர இடங்களில் வாழும் விவசாயிகளும் அடங்கியுள்ளனர். இலங்கை மக்களின் சகல பிரிவினருக்கும் மொபிடெல் வழங்கிவரும் சேவை ஈடிணையற்றதாகும். கடந்தவருடங்களில் நாம் வென்ற வர்த்தக நாம உறுதி பெறியியல் துறை சிறப்பு மற்றும் ஏனைய பல விருதுகள் இதற்கு சான்று பகர்கின்றன. இந்நிறுவனம் நாளுக்கு நாள் பலமடைந்து சக்திபெற்று வருகின்றது. அது மேலும் முன்னேற்றமடையும் என்பதே எனது நம்பிக்கையாகும். மொபிடெல் நிறுவனம் தேசிய கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநராக மாறியது முதல் நாட்டில் ICT துறையில் ஏற்பட்ட மாற்றம் ஒப்பிட முடியாததாகும். நிறுவனத்தை இன்றைய நிலைக்குக் கொண்டு வந்த மொபிடெலின் சகல ஊழியர்களையும் நான் பாராட்ட விரும்புகின்றேன். எதிர்காலத்தில் இந்த வளர்ச்சி தொடரும் என நம்புகின்றேன்' என்று அவர் கூறினார்.

மொபிடெல் நிறுவனம் சூரியவௌ, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் தொடர்பு நிலையங்களை திறந்ததன் மூலம் நாட்டின் வடக்கு, தெற்கு பிராந்தியங்களில் அதன் சேவையை விஸ்தரித்தது. இச்செயற்பாடானது இப்பிரதேச இளைஞர்களுக்கு ICT துறை சார் வேலை வாய்புகளை பெற்றுக்கொடுத்துள்ளது. கேகாலையில் தகவல் தொழில்நுட்ப அபிவிருத்தி நிலையம் ஒன்றையும் அது நிறுவியுள்ளது. அத்துடன், மொபிடெல் நிறுவனம் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து அரசாங்கத்துறை ஊழியர்களுக்கு 'உபகார இன்டர்நெற்' என்னும் பெறுமதிசேர் இணையத்தள சேவையொன்றை ஆரம்பித்துள்ளது. அரசாங்கத்துறை ஊழியர்களான அனைத்து உபகார வாடிக்கையாளர்களுக்கும் அது இலவசமாக HSPA மொபைல் Brodband டொங்கில்களை வழங்கியுள்ளது. வருமானத்துறையிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது. 2012ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு பகுதியில் நிறுவனத்தின் நிகர வருமானம் 01 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

மொபிடெலின் பிரதம நிறைவேற்று அதிகாரியான லலித் டி சில்வா நிறுவனத்தின் செயற்பாடு பற்றி கருத்து வெளியிடுகையில், '20 ஆண்டுகளுக்கு முன்னர் மொபிடெல் அதன் உலக தரம்வாய்ந்த கூட்டிணைப்பு நிறுவனமாக பயணத்தை ஆரம்பித்தது' என்று கூறினார். இது, அதன் ஊழியர்களுக்கு மாத்திரமல்ல, நாட்டிற்குமான ஒரு வாழ்நாள் பயணமாகும். இந்நிறுவனம் தற்பொழுது துரித வளர்ச்சி கண்டு இதற்கு முன்னர் ஒருபோதுமில்லாத அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்கின்றது. நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையிலும், சமூகசேவை (CSR) நடவடிக்கைகளிலும் ஸ்ரீலங்கா டெலிகொம் மொபிடெல் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளது. 'CHANGE TO LEAD NOW' (முன்னேறிச்செல்ல மாறுங்கள் இப்போதே) என்னும் எமது பிரசார நடவடிக்கை, இத்துறையில் எதிர்நோக்கப்படும் பெரும் சவால்களை முகம் கொடுப்பதற்கு எம்மை தயார்படுத்தும் வகையில் நிறுவனத்திற்குள் ஈடிணையற்ற வளர்ச்சியையும் தலைமைத்துவத்தையும் அடைவதை நோக்கமாகக் கொண்டதாகும். நிறுவனத்தை மேலும் உயர் நிலைக்குக் கொண்டு செல்லும் வகையில் புதிய மூலோபாயங்கள், கொள்கைகள், நடைமுறைகள், தொழில்நுட்பங்கள், யோசனைகள் ஆகியன செயற்படுத்தப்படுகின்றன. இரு தசாப்தங்களாக தொடர்ந்தும் எமக்கு வலுவூட்டிய எமது வாடிக்கையாளர்களையும் இங்கு விசேடமாக குறிப்பிட வேண்டும். மொபிடெல் அதன் 20 வருடகால வரலாற்றை பெருமையுடன் பின்நோக்கிப் பார்க்கின்றது. இந்தத்துறையில் நிலையான மாற்றங்களை உருவாக்கும் பொருட்டு, எதிர்காலத்தை நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்நோக்குகின்றது. இலங்கையின் ICT துறையில் மொபிடெல் நிறுவனம் ஒரு அடையாளச் சின்னமாக விளங்கும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .