2026 ஏப்ரல் 19, ஞாயிற்றுக்கிழமை

கொழும்பு பங்குச்சந்தை 17 மாத கால உயர்வு பெறுமதியை பதிவு செய்தது

A.P.Mathan   / 2013 மே 07 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று திங்கட்கிழமை கொழும்பு பங்குச்சந்தையின் கொடுக்கல் வாங்கல்களின் போது கடந்த 17 மாத காலப்பகுதியில் பதிவாகியிருந்த அதியுயர்வு பெறுமதி பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், சந்தையின் மொத்தப்பெறுமதியும் 42 பில்லியன் ரூபாவினால் அதிகரித்திருந்தது.

2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதியின் பின்னர் கொழும்பு பங்குச்சந்தையின் சந்தைப்பெறுமதி 4 பில்லியன் ரூபாவை கடந்த முதலாவது சந்தர்ப்பமாக நேற்றைய தின கொடுக்கல் வாங்கல்கள் அமைந்திருந்தன. உறுதியான கம்பனிசார் மற்றும் சில்லறை பங்காளர்களின் ஈடுபாட்டுடன் இந்த பெறுமதியை கடக்க முடிந்திருந்ததாக பங்குமுகவர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர்.

ஜோன் கீல்ஸ், நெஸ்லே லங்கா, டிஸ்டில்லரிஸ், கொமர்ஷல் லீசிங், சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு கொடுக்கல் வாங்கல்கள் பெருமளவு இந்த சந்தைப்பெறுமதி அதிகரிப்பில் பங்களிப்பை செலுத்தியிருந்தன. சந்தையின் பிரதான சுட்டெண் 107.99 புள்ளிகள் அதிகரித்து 6,121.7 ஆக பதிவாகியிருந்ததுடன், கடந்த 2011 டிசெம்பர் 1 ஆம் திகதியின் பின்னர் பதிவாகிய அதியுயர் பெறுமதியாக இது அமைந்திருந்தது. S&P SL 20 விலைச்சுட்டெண் 55 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்திருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .