2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

சிபிஎல் நிறுவனத்துக்கு சிறந்த கூட்டாண்மை விருது

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 12 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் முன்னணி கூட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் சிலோன் வர்த்தக சம்மேளனத்தின் (Ceylon Chamber of Commerce) வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் தேசத்தின் 'சிறந்த கூட்டாண்மை விருதை' (Best Corporate Citizen of year) சிபிஎல் நிறுவனம் வென்றுள்ளது. சிபிஎல் நிறுவனமானது சமூக பொறுப்புணர்வுத் திட்டங்களில் வழங்கி வரும் பங்களிப்புக்காக 10 சிறந்த நிறுவனங்களில் இரண்டாவது ரன்னர் அப்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விருதை ஐந்தாவது தடவையாக சிபிஎல் நிறுவனம் வென்றுள்ளது.

உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேம்படுத்தும் சமூக பொறுப்புணர்வு திட்டமான 'கமட சரண' நிகழ்ச்சித் திட்டத்திற்கு விசேட விருதும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் ஊடாக 50 திட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'இலங்கையில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் அடிப்படை வசதிகளின்றி வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தில் ஏற்படுத்திக் அதன் மூலம் பயனடையச் செய்வது எமது கூட்டு சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களின் குறிக்கோளாக உள்ளது' என சிபிஎல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சியாமளி விக்ரமசிங்க தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த விக்ரமசிங்க உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் 'கமட சரண' திட்டத்தின் போது அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றிருந்தனர் என்றார்.

கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த வலகம கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆற்றைக்கடக்க பயன்படுத்தும் மரப்பேழையானது மழைகாலங்களில் வழுக்கும் தன்மையுடையதாகவும், பாடசாலை மாணவர்கள் புத்தகங்களை தவறவிட்ட சந்தர்ப்பங்களும் இடம்பெற்றுள்ளன. அக்கிராமத்திற்கு 'கமட சரண' திட்டத்தின் மூலம் பாலம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. 'இவ்வசதிகள் நாம் அபிவிருத்தி செய்ய வேண்டிய மிகச்சிறிய உட்கட்டமைப்பு வசதிகளாக இருப்பதுடன், அதன் முழுப்பயனை சமுதாயம் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும்' என சிபிஎல் நிறுவனத்தின் குழுப்பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பணிப்பாளருமான நந்தன விக்ரமகே தெரிவித்தார்.

சிபிஎல் நிறுவனத்தின் 'கமட சரண' திட்டத்தின் ஊடாக வட, கிழக்கு உள்ளடங்கலாக நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் உள்ள கிராமங்களில் நூலக வகதி, பாலம், பாடசாலை அபிவிருத்தி, குடிநீர் வசதி போன்றவை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 'மஞ்சி டிகிரி சிஸ்யதாரா' (5ஆம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள்), விவசாய பின் ஒருங்கிணைப்புத் திட்டம், தேசிய விளையாட்டு வீரர்களுக்கு ஊக்குவிப்பு திட்டம் போன்ற செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

மேலும் ஊழியர் உறவுகளை அடையாளப்படுத்தும் நோக்கில் 'சிறந்த ஊழியர் உறவு' பிரிவில் விருதொன்றையும் வென்றது. எனவே எதிர்காலத்தில் உச்சமட்ட ஊழியர் திருப்தியை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் செயற்படவுள்ளோம். மஞ்சி வர்த்தக நாமமானது CMO விருது வழங்கும் நிகழ்வில் 'ஆசியாவின் சிறந்த தொழில்வழங்குநர் வர்த்தகநாமம்' விருதினை (Asia’s Best Employer Brand) இரண்டு தடவைகள் வென்றுள்ளது' என CBL நிறுவனத்தின் குழு பணிப்பாளர் ஷியாமளி விக்ரமசிங்க தெரிவித்தார்.

சிபிஎல் நிறுவனத்தின் குழுப் பணிப்பாளரும், சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் தலைவருமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில்... 'அண்மையில் சிபிஎல் நிறுவனம் பெற்ற வெற்றியானது அனைத்து பிரிவுகளையும் வழங்கக்கூடிய வர்த்தக நாமமாக இலங்கையர் மத்தியில் சிறந்த இடத்தை பெற்றுள்ளது' என்றார்.

எமது நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் ஊடாக சமூகத்திற்கும், தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பு வழங்கவுள்ளோம். இதைக் கருத்தில்கொண்டு சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவசியமான மிகச்சிறந்த தீர்வுகள் எமது சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு திட்டத்தினதும் நிதிஒதுக்கீடு மற்றும் வளப்பயன்பாடு காரணமாக சிறந்த தீர்வுகளை வழங்க முடிந்துள்ளது. சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் கல்வி, கலை, கலாசாரம், விளையாட்டு, இடர் நெருக்கடிகளின் போது செயற்படும்விதம் போன்ற பிரிவுகளின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றன. இச் செயற்றிட்டங்கள் ஊடாக இளைஞர்களுக்கு உந்துசக்தியளித்து தேசிய வேலைப்படையின் தரத்தையும், அபிவிருத்தியையும் மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் பல உள்ளடக்கப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .