Freelancer / 2022 ஏப்ரல் 07 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட பாண்டியன்குளம் கௌரி அம்பாள் சமேத கேதார லிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தினுள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
செவ்வாய்கிழமை இரவு ஆலயத்தின் முன்றலில் இருந்த உண்டியலை, சிலர் தூக்கிச் சென்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
இவ்வுண்டியல் திருட்டு தொடர்பில் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (R)
18 minute ago
44 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
44 minute ago
2 hours ago