Niroshini / 2021 நவம்பர் 09 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ. கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட மானுருவி கிராமத்தில்,விவசாய கிணறு ஒன்று தாழிறங்கியுள்ளது.
நேற்று (08) இரவு, தொடர்சியாக பெய்த மழை காரணமாகவே, விவசாய குடும்பம் ஒன்றின் கிணறு முற்றாக நிலத்தில் இறங்கியுள்ளது.
"இரவு 12.00 மணியளவில், பாரிய சத்தம் ஒன்று கேட்டுள்ளது. கடும் மழை காரணமாக பார்க்கமுடியவில்லை. காலையில் எழுந்து பார்த்தால் கிணற்றை காணவில்லை" என, வீட்டுக்காரார்கள் தெரிவித்துள்ளார்கள்.
சுற்றிவர சீமேந்தினால் கட்டப்பட்ட கிணறு, கால்மிதி, கிணற்றில் அருகில் உள்ள மோட்டர் என்பன நிலத்துக்குள் முற்றாக புதைந்து, காணாமல் போயுள்ளன.
இந்த கிணற்றை நம்பியே வீட்டுத்தோட்டம் உள்ளிட்ட விவசாய செய்கையை மேற்கொண்டுவந்துள்ளதாகவும் தற்போது கிணறு நிலத்தில் புதையுண்டதால் குடிதண்ணீருக்கும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகவும், உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
10 minute ago
33 minute ago
38 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
38 minute ago
48 minute ago