Freelancer / 2022 மே 11 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது முப்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தலாம் என்கிற உத்தரவு சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பொதுச் சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் அனுமதி வழங்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நலின் ஹேரத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் கருத்து தெரிவித்த எம் ஏ சுமந்திரன்,
அரசியலமைப்பின் 52(3) பிரிவின்படி அமைச்சரவை கலைக்கப்படும் போது அனைத்து அமைச்சின் செயலாளர்களும் பதவி வகிப்பதை நிறுத்துவார்கள்.
அந்த வகையில் பொதுச் சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் அனுமதி சட்டவிரோத உத்தரவு என்றார். (R)
3 hours ago
9 hours ago
27 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
27 Jan 2026