Freelancer / 2022 மே 30 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
செந்தூரன் பிரதீபன்
சுன்னாகம் - ஏழாலை, தெற்கு மயிலங்காட்டுப் பகுதியில் வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கமைய பொலிஸ் விசேட பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய , பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
1,670 லீட்டர் மண்ணெண்ணெய், 310 லீட்டர் பெட்ரோல், 200 லீட்டர் டீசல் என்பன கைப்பற்றப்பட்டது.
மேலும், குப்பிளான் பிரதேசத்தில் 40 லீட்டர் பெற்றோலுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (R)
59 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago