Editorial / 2019 மே 16 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்ட மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில், மன்னார் பிரதேச மீனவக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மீன்பிடி உபகரணங்கள் விற்பனை நிலையம், இன்று (16) காலை 10 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், மன்னார் மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்ராஸ், மன்னார் மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் திருமதி சி.எஸ்.அமிர்தநாதன், ஓய்வுபெற்ற மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, மீனவச் சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், ஓய்வுபெற்ற மாவட்டக் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் ஏ.செபமாலை, மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
30 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago