Editorial / 2021 நவம்பர் 25 , பி.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உட்பட சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 63 பேரையும் டிசெம்பர் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சூம் தொழில்நுட்பம் ஊடாக வழக்கு விசாரணைகள், இன்று (25) நடைபெற்றபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
21.4.2019 அன்று உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்ற பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பெயரிலும் காத்தான்குடியை சேர்ந்த 65 பேர் கைது செய்யப்பட்டன்.
அதேவேளை, சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர் உட்பட நால்வரையும் மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்தனர். இரு வெவ்வேறு வழக்குகளைக் கொண்ட 69 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து 64 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேரும் நாட்டிலுள்ள பொலன்னறுவை, அனுராதபுரம், கேகாலை மற்றும் திருகோணமலை போன்ற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த மாதம் சஹ்ரானின் மனைவி பிணை மனுத் தாக்கல் செய்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago