Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2011 செப்டெம்பர் 29 , மு.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
'யாழ். வைத்தியர்களின் அர்ப்பணிப்பான சேவையின் காரணமாக விலங்கு விசர் நோயில் இருந்து எமது மக்களின் உயிர்களை காப்பாற்ற முடிந்தது' என யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை தியாகிகள் அறங்கொடை நிலையத்தில் நடைபெற்ற உலக விலங்கு விசர் நோய் தின விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
சென்ற வருடத்தில் ஓருவர் மட்டும் விலங்கு விசர் நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருந்தார். இந்த வருடம் எவரும் விலங்கு விசர் நோயின் தாக்கம் காரணமாக உயிரிழக்கவில்லை.
விலங்கு விசர்நோய் தடுப்பு நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மிகச் சிறப்பாக திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டு இருக்கிறது. எதிர்காலத்தில் யாழில் இந்த நோயின் தாக்கம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்று கூறினார்.
விலங்கு விசர் நோய் பற்றிய போதியளவான விளிப்புணர்வுகள் யாழ். மக்களுக்கு கிடைத்திருப்பதாகவும் அது ஒர் மகிழ்சியான விடையம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
1 hours ago
8 hours ago
19 Oct 2025
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago
19 Oct 2025
19 Oct 2025