2021 செப்டெம்பர் 20, திங்கட்கிழமை

விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட 9பேர் இன்று நீதிமன்றில் முன்னிலை

Editorial   / 2020 ஜனவரி 19 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 09 பேர், இன்று (19) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேக நபர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் உள்ள தடைசெய்யப்பட்ட வலயப்பகுதியில் குறித்த சந்தேக நபர்கள் நின்றிருந்துள்ளனர்.

அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குறித்த சந்தேக நபர்கள் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து,  குறித்த சந்தேக நபர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படை குழுவினரால் நேற்று (18) பிற்பகல் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

பின்னர், கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

31 முதல் 68 வயதுடைய, ஆடிஅம்பலம, காலி, மினுவாங்கொடை, நீர்கொழும்பு, ஹதரலியத்த, வாரியபொல, சீதுவை மற்றும் வலஸ்முல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .