2022 ஜூலை 02, சனிக்கிழமை

ஹொலிஹீரோஸ் வி.கவுக்கு சீருடை.

Shanmugan Murugavel   / 2022 மார்ச் 08 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அஸ்ஹர் இப்றாஹிம்

சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழக கால்பந்தாட்டச் சீருடை அறிமுக நிகழ்வானது, கல்முனை பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ. ஆதம்பாவா தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், ஹொலி ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் போஷகரும், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத் தலைவரும், முபாறக்ஸ் டெக்ஸ் முகாமைத்துவ பணிப்பாளருமான எம்.எஸ்.எம். முபாறக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கால்பந்தாட்டச் சீருடைகளை கழக முக்கியஸ்தர்களிடம் கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .