2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

மாவடிப்பள்ளியில் விபத்து; ஒருவர் காயம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 14 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காரைதீவு, மாவடிப்பள்ளி பிரதான வீதியில், மாவடிப்பள்ளி பாலத்துக்கு அருகில்  இன்று (14) காலை இடம்பெற்ற கப் ரக வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த கப் ரக வாகனம், பாலத்தில் மோதுண்டு பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், வாகனத்தின் சாரதியே காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .