Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். கிருஸ்ணா
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி அதிகார பகுதிக்குட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான முதலாம், இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார காரியாலயம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், சென் ஜோன்டிலரி த.வி, காலை 08.30 மணிமுதல் 11.30 மணிவரையும், டிக்கோயா நகரமண்டபம் மதியம் 01 மணிமுதல் 3.30 மணிவரையும்,என்பீல்ட் த.வி காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையும் ஹொன்சி தவி மதியம் 01 மணிமுதல் 3.30 மணிவரையும் கேர்கசோல்ட் த.வி காலை 09 மணிமுதல் மதியம் 01 மணிவரையும் சென்மேரிஸ் த.வி காலை 09 மணிமுதல் பிற்பகல் 02 மணிவரையும் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரையில் முதலாம், இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றிக்கொள்ள தவறியவர்கள், கட்டாயமாக உரிய நேரத்தில் சென்று தடுப்பூசியை தவறாது ஏற்றிக்கொள்ளுமாறு பொகவந்தலாவை பொது சுகாதார காரியாலயத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 minute ago
34 minute ago
49 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
34 minute ago
49 minute ago
56 minute ago