2023 செப்டெம்பர் 24, ஞாயிற்றுக்கிழமை

தலைகீழாக ஓடுவதில் இரண்டு உலக சாதனை

Freelancer   / 2023 மே 11 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் ஏதாவது ஒரு மூலையில் சாதனை மனிதர்கள் தினந்தோறும் மெச்சத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தி, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்தவகையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவரும், காவல்துறையில் பணியாற்றி கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டவருமான ஆர்.சேகர் என்பவர் தலைகீழாக கைகளால் தரையில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார் என்பது ஆச்சரியமான விஷயம்.

காவல்துறையில் பணியாற்ற உடல்தகுதி இல்லை என்று அனுப்பப்பட்ட இவர் படைத்த முதல் சாதனையை முறியடிக்க உலகில் வேறு யாரும் இல்லை. எனவே அவருடைய முந்தைய சாதனையை அவரே முறியடித்து தற்போது 2-வது உலக சாதனையும் படைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X